தமிழ் சினிமாவில் தற்போதைய நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் யோகி பாபு. அவரின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவருகிறது. இப்படி நகைச்சுவை நடிகராக வலம்வந்து கொண்டிருந்த யோகி பாபு, நயன்தாரா நடிப்பில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்திலிருந்து நாயகனாகவும் நடித்துவருகிறார்.
'கப்பல்' பட இயக்குநர் கார்த்திக் கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகிவரும் படம் 'டக்கர்'. இப்படத்தில் யோகிபாபு அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் தோன்றுகிறார். மேலும் இவர்களுடன் திவ்யான்ஷா கௌஷிக், அபிமன்யு சிங், முனீஸ்காந்த், ஆர்.ஜே. விக்னேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.