உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் காரணமாக அடுத்த மாதம் 14ஆம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு துறைகள் நஷ்டமடைந்துள்ளன. படப்பிடிப்பு இல்லாததால், திரைப்பட தொழிலாளர்களும், அவர்களது குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு உதவ திரைத்துறையினர் முன்வர வேண்டும் என்று ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி கோரிக்கை விடுத்திருந்தார்.