தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ஏன் கனவே' ஆல்பம் பாடல் வெளியீடு! - ஏன் கனவே இசை ஆல்பம் பாடல்

"ஏன் கனவே" ஆல்பம் பாடலை நடிகர் ஆர்யா, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி வெளியிட்டனர்.

song
song

By

Published : Oct 14, 2021, 7:46 PM IST

"சார்பட்டா" படத்தில் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் "சந்தோஷ் பிரதாப்". இவர் கிங்ஸ் பிக்சர்ஸ் கௌரிசங்கர் தயாரிப்பில் சவதிஸ்டா இணைந்து நடித்துள்ள ஆல்பம் பாடல் "ஏன் கனவே".

இந்த ஆல்பம் முழுக்க முழுக்க உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்யும், புது மண தம்பதிகளுக்கு இடையே நடக்கும் சில சொல்லப்படாத பிரச்னைகளை, எடுத்துச் சொல்லும் வகையில் மிக உணர்வுப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஏன் கனவே பாடல் வெளியீடு
ஏன் கனவே பாடல் வெளியீடு

இப்பாடலை, பாடலாசிரியர் முத்தமிழ் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு "சுந்தர்" கவனிக்க , "யாஞ்சி யாஞ்சி", "ராசாளியே" "ஆளப்போறான் தமிழன் " போன்ற பாடல்களைப் பாடிய "சத்யபிரகாஷ்" இந்த பாடலை பாடியுள்ளார். டி.ஆர்.பாலா இந்த ஆல்பத்தை இயக்கியிருக்கிறார். இந்த ஆல்பம் பாடலை நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ஆகியோர் வெளியிட்டனர்.

இதையும் படிங்க: ரியோவின் 'கண்ணம்மா என்னம்மா' இசை ஆல்பம் டீசர் அவுட்!

ABOUT THE AUTHOR

...view details