தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விபத்திற்குப் பிறகு எழுந்து நின்ற யாஷிகா - வைரலாகும் புகைப்படம் - yashika Aannand

நடிகை யாஷிகா ஆனந்த் விபத்திற்குப் பிறகு எழுந்து நின்றுள்ள புகைப்படத்தை நடிகர் அசோக் வெளியிட்டுள்ளார்.

யாஷிகா
யாஷிகா

By

Published : Sep 27, 2021, 9:18 AM IST

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த ஜூலை 26ஆம் தேதி இரவு மாமல்லபுரம் அருகே நண்பர்களுடன் காரில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது.

அந்த விபத்தில் அவரது தோழி பவனி ஷெட்டி என்பவர் உயிரிழந்தார். யாஷிகா உள்ளிட்ட இரண்டு நண்பர்களுக்குப் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து கால், இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்ட யாஷிகாவிற்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அறுவைச் சிகிச்சை செய்த யாஷிகா சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு எழுந்து நின்றுள்ளார். இவரை நடிகர் அசோக் தனது மனைவியுடன் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

நடிகர் அசோக் வெளியிட்ட பதிவு

அப்போது எடுத்த புகைப்படத்தை அசோக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "எனக்கும், எனது குடும்பத்திற்கும் நல்ல தோழியாக இருக்கும் யாஷிகா குணமடைந்துவருகிறார். அவர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மீண்டுவர என் வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார். யாஷிகா இரண்டு மாதங்களுக்குப் பிறகு எழுந்து நின்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இதையும் படிங்க:சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ட்ரெய்லர் வெளியானது!

ABOUT THE AUTHOR

...view details