இயக்குநர் வடிவுடையானிடம் உதவியாளராக பணியாற்றிய புவன், யாஷிகா ஆனந்தை வைத்து 'சல்பர்' என்னும் படத்தை இயக்கவுள்ளார். முகேஷ் ஃபிலிம் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். மேலும் அவரே இப்படத்தில் வில்லனாகவும் நடிக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடைப்பெற்று வருகிறது.
காக்கிச்சட்டையில் யாஷிகா ஆனந்த் - 'சல்பர்' ஃபர்ஸ்ட் லுக் - சல்பர் யாஷிகா ஆனந்த்
சென்னை: புவன் இயக்கத்தில் காவல் துறை அலுவலராக யாஷிகா ஆனந்த் நடிக்கும் 'சல்பர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
yashika
ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் முதல் முறையாக காவல்துறை அலுவலராக நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 8) பூஜையுடன் தொடங்கியது. கையில் கன்னுடன் போலீஸ் வேடத்தில் யாஷிகா ஆனந்த் தோற்றமளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது.