தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலைமை... ரசிகர்கள் வருத்தம்... - யாஷிகா ஆனந்த் உடல்நிலை

கார் விபத்துக்கு பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை யாஷிகாவின் அண்மைகால புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

yashika anand
yashika anand

By

Published : Sep 13, 2021, 8:06 PM IST

சென்னை:நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த ஜூலை 25ஆம் தேதி காரில் சென்றபோது, விபத்தில் சிக்கினார். அவருடன் சென்ற தோழி வள்ளி ஷெட்டி என்பவர் உயிரிழந்த நிலையில், இவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார்.

இவரின் உடல்நிலை குறித்து செய்திகள் அவ்வப்போது வெளியாகி வந்தன. தற்போது, இவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் காலில் கட்டுடன் படுத்து இருக்கும் யாஷிகாவிற்கு அவரது தாய் உணவு ஊட்டுகிறார்.

தாய் உடன் யாஷிகா ஆனந்த்

இப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பகிர்ந்துவரும் அவரது ரசிகர்கள், யாஷிகா விரைவில் நலமுடன் மீண்டுவர வேண்டி பிரார்த்தனை செய்கிறோம்" என்று குறிப்பிட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலை - ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details