'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதற்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றதன் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த், அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், இவர் சமீபத்தில் never have I ever என்ற கேமை தனது தோழியுடன் விளையாடியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு 'நான் செய்திருக்கிறேன்' அல்லது 'நான் செய்தது இல்லை' என்ற பதிலளிக்க வேண்டும்.
அப்போது அவர், “குளிக்காமல் 24 மணிநேரம் இருந்திருக்கிறேன் என்றும், சிறுவயதில் ஆண்களின் கழிப்பறைக்கு சென்று இருக்கிறேன், போலி ஐடி பயன்படுத்தி இருக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து,"மக்கள் பலர் பயன்படுத்தும் நீச்சல் குளத்தில் சிறுநீர் கழித்திருக்கிறேன்" என்று ஒப்புக் கொண்டுள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள், என்னது யாஷிகாவிற்கு இத்தனை கெட்ட விஷயங்களை செய்துள்ளாரா? என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.