தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நாளை முதல் தொடங்கும் ’கேஜிஎஃப் 2' படப்பிடிப்பு! - latest cinema news

நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகும் ’கேஜிஎஃப் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை(அக்.08) முதல் தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

கேஜிஎஃப் 2
கேஜிஎஃப் 2

By

Published : Oct 7, 2020, 2:22 PM IST

கன்னட மொழியில் வெளியான 'கேஜிஎஃப்' படத்துக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என்று ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள இதில் நடிகர் யாஷ் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் இணைந்து இந்தி நடிகர் சஞ்சய் தத், நடிகை ரவீனா டாண்டன், வடசென்னை படத்தில் நடித்த சரண் சக்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது. இந்நிலையில் 'கேஜிஎஃப் 2' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நாளை(அக்.08) முதல் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இம்மாத இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'வாத்தி கம்மிங்'- யூ-டியூபில் இரண்டே மாதத்தில் சாதனை படைத்த விஜய் பாடல்!

ABOUT THE AUTHOR

...view details