தென்னிந்தியாவுக்கான தாதாசாகேப் பால்கே விருது சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதில் மகேஷ் பாபு, அனுஷ்கா உள்ளிட்ட பலரது பெயர் இடம்பெற்றிருந்தது. கன்னட நடிகர் யஷ், 'KGF’ படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தாதாசாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
தாதாசாகேப் பால்கே விருதுபெற்ற 'KGF’ நாயகன் - தாதாசாகெப் பால்கே விருது
'KGF’ (கேஜிஎப்) படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தாதாசாகேப் பால்கே விருது வழங்கி யஷ் கவுரவிக்கப்பட்டுள்ளார்.
![தாதாசாகேப் பால்கே விருதுபெற்ற 'KGF’ நாயகன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4517220-661-4517220-1569145822721.jpg)
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த திரைப்படம் கேஜிஎப் (KGF chapter 1). ஆக்ஷன் திரில்லர் ரகத்தில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று ரூ. 250 கோடிக்கு மேல் வசூல் செய்தது. கன்னட மக்களிடையே மட்டும் பிரபலமாக இருந்த யஷ், இதன்மூலம் இந்தியா முழுக்க பிரபலமடைந்தார்.
கேஜிஎப் போன்ற பெரிய பட்ஜெட் படத்தில் இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் யஷ் கவரவில்லை என்றால் படம் வணிக ரீதியாக வெற்றியடைந்திருக்க வாய்ப்பில்லை. தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார் யஷ். அவரை கவுரவிக்கும் விதமாக தாதாசாகெப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.