'தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை யாமி கௌதம். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், அமிதாப் பச்சன், ரித்திக் ரோஷன், அஜய் தேவ்கான் உள்ளிட்ட பலரது படங்களிலும் நடித்துள்ளார்.
'இதெல்லாம் சரிப்பட்டு வராது... நாமே களத்துல இறங்கிறவேண்டியதுதான்' - யாமி கெளதம் - யாமி கெளதம் படங்கள்
தேசிய ஊரடங்கு உத்தரவையடுத்து அழகு நிலையம் (பியூட்டி பார்லர்) போக முடியாததால் நடிகை யாமி கெளதம் வீட்டிலேயே அழகு சாதனப்பொருள்களைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
!['இதெல்லாம் சரிப்பட்டு வராது... நாமே களத்துல இறங்கிறவேண்டியதுதான்' - யாமி கெளதம் Yami Gautam](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6554835-866-6554835-1585244715530.jpg)
Yami Gautam
தற்போது தேசிய ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் யாமி கெளதம் தனது சருமத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். தனது சமூக வலைதளப்பக்கத்தில் 'வீட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்கர்ப்ஸ்' என்று தலைப்பிட்டுள்ளார்.