’பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்டவர் யாஷிகா ஆனந்த். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘நோட்டா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். திரையுலக பிரபலங்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில், வீடியோ, புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதன்மூலம் தங்கள் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பார்கள். தற்போது யாஷிகா ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
யாஷிகா வெளியிட்ட ஜிம் ஒர்க்-அவுட் வீடியோ!
‘பிக் பாஸ்’ பிரபலம் யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
yashika
இந்த வீடியோவை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். அடுத்த படத்துக்காகதான் யாஷிகா இவ்வாறு ஒர்க்-அவுட் செய்து வருவதாக கூறப்படுகிறது. யாஷிகா நடித்துள்ள ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’, ‘ஜாம்பி’ ஆகிய படங்கள் வெளியாகும் நிலையில் உள்ளன.
Last Updated : May 27, 2019, 4:00 PM IST