தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'படம் பிடிக்கவிட்டால் டிக்கெட் பணம் ரிட்டர்ன்' - புதுமுக நடிகர் அதிரடி! - yaaro music release ceremony

என் படம் பிடிக்காவிட்டால் டிக்கெட் பணத்தை திருப்பி தருகிறேன் என புதுமுக நடிகர் வெங்கட் ரெட்டி இசை வெளியீட்டு விழா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'படம் பிடிக்கவிட்டால் டிக்கெட் பணம் ரிட்டர்ன்' - புதுமுக நடிகர் அதிரடி!
'படம் பிடிக்கவிட்டால் டிக்கெட் பணம் ரிட்டர்ன்' - புதுமுக நடிகர் அதிரடி!

By

Published : Jan 25, 2022, 11:36 AM IST

சென்னை வடபழனி பிரசாத் லேப் திரையரங்கில் ’யாரோ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (ஜன.25) நடைபெற்றது. இதில் அப்படத்தின் நடிகரும், தயாரிப்பாளருமான வெங்கட் ரெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர் பேசுகையில், “சென்னையில் திரைப்படம் எடுக்க வேண்டுமென்றால் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும் என சிலர் சொன்னார்கள். இங்குள்ள காவல்துறை அப்படிப்பட்டவர்கள் அல்ல, அனைவரும் மிகவும் நியாயமானவர்கள். நான் ஒரு ரூபாய் கூட காவல்துறைக்கு என செலவு செய்யவில்லை.

யாரும் என்னிடம் வந்து கேட்கவில்லை. அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன் . மேலும் நான் ஐடி ஊழியராக பணிபுரிந்து சேர்த்த பணத்தில் திரைப்படம் எடுத்திருக்கிறேன்.

இந்த திரைப்படம் நன்றாக இல்லை என யாராவது படம் பார்த்தவர்கள் வருத்தம் தெரிவித்தால், அவர்களின் டிக்கெட் பணத்தை நான் அப்பொழுதே திருப்பித் தருகிறேன் என உத்தரவாதம் அளிக்கிறேன்.

நான் உங்களைதான் நம்பி இருக்கிறேன். நான் மீண்டும் கதாநாயகனாக தொடர்வதும் அல்லது ஐடி பணிக்கு திரும்பப் போவதும் உங்கள் கையில்தான் உள்ளது” என்றார்.

இதையும் படிங்க:தாயுடன் நடிகர் விஜய்; புகைப்படம் வைரல்!

ABOUT THE AUTHOR

...view details