தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஜய் சேதுபதி வெளியிட்ட WWW பட டீசர்! - கோலிவுட், டோலிவு

பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குநர் கே.வி. குகன் இயக்கத்தில் உருவான WWW ( Who, Where,Why) படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டார்.

www movie teaser
www movie teaser

By

Published : Feb 7, 2021, 8:51 PM IST

கே.வி. குகன் தெலுங்கில் "118" படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். நந்தமுரி கல்யாண் நடிப்பில் உருவான த்ரில்லர் திரைப்படம், தெலுங்கு திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்று, மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து "WWW (who, where, why)" எனும் தலைப்பில் புதிய படத்தை கே.வி. குகன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஆதித் அருண், ஷிவானி ராஜசேகர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் நடிகர் ராணா டகுபதி வெளியிட்டார். தொடர்ந்து இப்படத்தின் தமிழ் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி வெளியிட்ட WWW பட டீசர்

இணைய வழியாக வீடியோ கால் மூலம் காதலர்கள் இருவரும் பேசிகொண்டிருக்கும்போதே ஹேக்கரால் இவர்களது ஃபோன் துண்டிக்கப்படுகிறது. போன் சுவிட்ச் ஆப் செய்வதோடு முடியும் டீசர் படத்தை பார்ப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. ராமந்த்ரா கிரியேஷன்ஸ் சார்பில் டாக்டர். ரவி ராஜூ டட்லா தயாரிக்க விஜய் தரண் டட்லா இணை தயாரிப்பு செய்துள்ளார். தொடர்ச்சியாக ஹிட்டான ஆல்பங்களை தொகுத்து வரும் சைமன் கே. கிங் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சம்மரில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:"களத்தில் சந்திப்போம்" வெற்றி களிப்பில் மஞ்சிமா மோகன்!

ABOUT THE AUTHOR

...view details