தற்போது ரஜினியின் 168ஆவது திரைப்படமான 'அண்ணாத்த' படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுவருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.
'அண்ணாத்த' படக்குழுவில் புதியதாக இணையும் எழுத்தாளர் - அண்ணாத்த படக்குழுவில் இணைந்த எழுத்தாளர் வேல ராமமூர்த்தி
இயக்குநர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துவரும் 'அண்ணாத்த' திரைப்படத்தில் புதியதாக எழுத்தாளர் வேல ராமமூர்த்தி இணைந்துள்ளார்.
writer Vela Ramamoorthy joins the cast of Annaatthe
படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ் எனப் பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கும் நிலையில் பிரபல எழுத்தாளரான வேல ராமமூர்த்தி படக்குழுவில் இணைந்துள்ளார். 'குற்றப் பரம்பரை', 'பட்டத்து யானை' போன்ற நூல்களை எழுதியுள்ள இவர், 'மதயானைக் கூட்டம்', 'சேதுபதி' போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'அண்ணாத்த’ ஆடுறார் ஒத்திக்கோ - தலைவர் 168 டைட்டில் வெளியானது