மாரி, மாரி 2 ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் பாலாஜி மோகன் ஓபன் விண்டோ புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை கடந்த ஜுலையில் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் முதல் படமாக யோகிபாபு நடிப்பில் மண்டேலா என்ற திரைப்படம் உருவாகிவருகிறது. முழு நீள காமெடி படமாக உருவாகி வரும் மண்டேலாவில் சங்கிலி முருகன், ஜிஎம்.சுந்தர், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கும் இந்த படத்தை ஓபன் விண்டோ புரொடக்ஷன் நிறுவனத்துடன் ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் விஷ்பெரி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களும் தயாரிக்கின்றன.
விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு பரத் சங்கர் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜூலையில் தொடங்கிய நிலையில், தற்போது அதன் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பாளர் பாலாஜி மோகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.