பேட்மேன், சூப்பர்மேன், ஸ்பைடர் மேன் தொடங்கி அனைத்துமே சூப்பர் ஹீரோ படங்கள்தான். சூப்பர் ஹீரோ என்றால் நம்மில் பல பேருக்கு நினைவில் வருவது ஆண்கள்தான். ஆனால் தற்போது ஆண்களுக்கு இணையாக பெண்களும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
அந்த வகையில் ஹாலிவுட்டில் தற்போது நடிகை கேல் கடோட் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’வொண்டர் வுமன் 1984’. பட்டி ஜென்கின்ஸ் இயக்கியுள்ள இப்படம் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
இந்நிலையில் இத்திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கரோனா வைரஸ் காரணமாக ’வொண்டர் வுமன் 1984’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நடிகை கேல் கடோட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக 2017ஆம் ஆண்டு வெளியான `வொண்டர் வுமன்' திரைப்படம் வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 83 லட்சம் ரூபாய் வழங்கிய கோலிவுட் பிரபலங்கள்!