தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'என் சாவுக்கு அஜித்தான் காரணம்' - தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு - அஜித் ரசிகர்

நடிகர் அஜித் வீட்டின் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

By

Published : Oct 4, 2021, 7:41 PM IST

படங்களில் மட்டும் ரசிகர்களைச் சந்திக்கும் அஜித்தை எப்போதாவது வெளியே வந்தால், அவரை சுற்றி வளைத்து ரசிகர்கள் புகைப்படங்கள் எடுக்கின்றனர். அந்தப் புகைப்படங்கள் தான் அன்றைய நாளுக்கான ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறது.

அப்படிக் கடந்த ஆண்டு மருத்துவமனைக்குச் சென்றபோது, அஜித்தை மருத்துவமனையில் பணியாற்றும் பர்சானா என்பவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதனைக் கண்ட ரசிகர்கள், அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதாக வதந்தி பரப்பினர்.

இதனால் பர்சானாவை மருத்துவமனை நிர்வாகம் பணியிலிருந்து நீக்கியது. பிறகு ஷாலினி அஜித் கூறியவுடன், அவரை பணியில் சேர்த்துக்கொள்வது போன்று சேர்த்துவிட்டு மீண்டும் வங்கி லோன் காரணம் காண்பித்து பணியிலிருந்து மருத்துவமனை நிர்வாகம் பணியிலிருந்து நீக்கியுள்ளனர்.

தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

இந்நிலையில் அப்பெண் இன்று (அக்.4) சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றுள்ளார். உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தி, கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இது குறித்து அவர் கூறுகையில், "அஜித்தால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். அவர் போட்ட ஒரே மெயில் என் வாழ்க்கையை திருப்பி போட்டுவிட்டது. பல முறை இது குறித்து நான் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

என் சாவிற்கு அஜித்தான் காரணம். அவரை ஒருமுறையாவது நான் பார்க்க வேண்டும். இதனால் நான் ஓராண்டுக் காலமாக வேலை இல்லாமல் மன உளைச்சலில் தீக்குளிக்க முயன்றேன்" எனக் கதறி அழுதார்.

இதையும் படிங்க:அரசுன் இரண்டாம் ஆண்டு: சமூகவலைதளங்களில் கொண்டாடிய ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details