தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சந்தித்துக்கொள்ளும் அஜித்-விஜய்: எதிர்பார்ப்பில் தல-தளபதி ரசிகர்கள் - வலிமை அப்டேட்

அஜித்தின் 'வலிமை' படப்பிடிப்பும் விஜய்யின் 'பீஸ்ட்' படப்பிடிப்பும் ரஷ்யாவில் நடைபெறவிருப்பதால் அஜித்தும் விஜய்யும் சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பு தல-தளபதி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Ajith
Ajith

By

Published : Aug 2, 2021, 12:12 PM IST

Updated : Aug 2, 2021, 12:35 PM IST

அஜித்தின் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்க அஜித் உள்பட படக்குழுவினர் ரஷ்யா செல்ல உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் விஜய் நடிப்பில், உருவாகிவரும் 'பீஸ்ட்' படத்தின் மூன்றாம் கட்ட படிப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 2) சென்னையில் தொடங்கியுள்ளது. சென்னையில், படப்பிடிப்பை முடித்தவுடன் விஜய் உள்ளிட்ட 'பீஸ்ட்' படக்குழுவினரும் ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளனர்.

ரஷ்யாவில் 'வலிமை', 'பீஸ்ட்' படங்களின் படப்பிடிப்பு நடைபெறவிருப்பதால், அங்கு வைத்து அஜித்தும் விஜய்யும்ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவார்களா என்ற எதிர்பார்ப்பு தல-தளபதி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும்பட்சத்தில், அன்றைய தினம் சமூக வலைதளத்தில் கொண்டாட்டங்களுக்குப் பஞ்சமிருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது சமூக வலைதளத்தில் சண்டையிட்டுக்கொள்ளும் அஜித்-விஜய் ரசிகர்களுக்கு, இவர்கள் சந்தித்துக்கொண்டால், அந்தச் சந்திப்பு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க: யூ-ட்யூபில் சாதனைப் படைத்த விஜய் பாடிய 'செல்ஃபி புள்ள'

Last Updated : Aug 2, 2021, 12:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details