உலகளவில் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் படங்களில், புதிய படமாக 'நோ டைம் டூ டை' பிரமாண்டமாகத் தயாராகியுள்ளது. 25ஆவது ஜேம்ஸ் பாண்ட் படமான இதில் டேனியில் கிரேக் பாண்டாக நடித்துள்ளார்.
2006இல் வெளியான 'கேசினோ ராயல்' என்ற படம் மூலம் ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் முதல் முறையாகத் தோன்றினார் டேனியல் கிரேக். கேசினோ ராயல், குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கைஃபால், ஸ்பெக்ட்ரே படங்களுக்கு அடுத்து இவர் நடித்துள்ள கடைசி பாண்ட் படமாக 'நோ டைம் டூ டை படம்' அமைந்துள்ளது. 'நோ டைம் டூ டை' செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரமாக இனி தான் நடிக்கப் போவதில்லை என டேனியல் கிரேக் படக்குழுவினருடன் உணர்ச்சிப் பொங்க பேசிய காணொலி சமூக வலைதளத்தில் வைரலானது.
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரமாக நடித்த டேனியல் கிரேக்கை கெளரவிக்கும்விதமாக இங்கிலாந்து அரசு அவரை கப்பல் படைத் தளபதியாக நியமித்துள்ளது.