தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இது அன்பின் உழைப்பு - நவம்பரில் வில் ஸ்மித்தின் சுயசரிதை - பேட் பாய்ஸ்

புத்தகத்தை கையில் ஏந்தியபடி வில் ஸ்மித் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

Will Smith memoir in November
Will Smith memoir in November

By

Published : Jun 21, 2021, 3:29 PM IST

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் சுயசரிதை புத்தகம் நவம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட் பாய்ஸ் சீரிஸ், ஹேங்காக், சூசைட் ஸ்குவாட், பர்சியூட் ஆஃப் ஹேப்பினெஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமானவர் வில் ஸ்மித். இவர் தனது சுயசரிதையை மார்க் மேன்சன் என்பவர் உதவியோடு எழுதியிருக்கிறார். ‘வில்’ என தலைப்பிடப்பட்ட இப்புத்தகத்தை பென்குயின் பிரஸ் வெளியிடுகிறது. நவம்பர் 9ஆம் தேதி முதல் இது விற்பனைக்கு வரும் என வில் ஸ்மித் அறிவித்துள்ளார்.

புத்தகத்தை கையில் ஏந்தியபடி வில் ஸ்மித் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்புத்தகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ள ஸ்மித், இது அன்பின் உழைப்பு என தெரிவித்துள்ளார்.

இந்த புத்தக்கத்தின் முகப்பு அட்டையை நியூ ஓர்லியன்ஸை சேர்ந்த பிராண்டன் பிமைக் ஓடம்ஸ் என்பவர் வடிவமைத்துள்ளார்.

இதையும் படிங்க:பழங்குடியின மாணவர்களின் கல்விக்கு உதவும் மாளவிகா

ABOUT THE AUTHOR

...view details