'கடாரம் கொண்டான்' படத்தை அடுத்து விக்ரம் இன்னும் பெயரிடப்படாத 'விக்ரம் 58' படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 'விக்ரம் 58' படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விக்ரம். இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது, அடுத்தகட்ட படப்பிடிப்பை ரஷ்யா மற்றும் இஸ்டான்புல் ஆகிய இடங்களில் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
கமல்ஹாசனால் விக்ரம் பட வாய்ப்பை இழக்கும் நாயகி? - விக்ரம்
'விக்ரம் 58' படத்தில் இருந்து நடிகை பிரியா பவானி சங்கர் விலக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
vikram 58
இந்நிலையில் 'விக்ரம் 58' படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இதையடுத்து அவர் 'இந்தியன் 2' படத்தில் நடித்து கொண்டிருப்பதால், இரண்டு படத்திலும் நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் விக்ரம் 58 படத்தில் தொடருவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: சத்தியமா #விக்ரம்58 அப்டேட் சீக்கிரம் வரும்... நம்புங்க பாஸ்!