திருநெல்வேலி: அரசியல் கட்சி தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்துள்ள முக்கிய அறிவிப்பை வரவேற்று பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சிகளும் தயாராகி வருகின்றன. இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது உறுதி என்பதை தெரிவித்திருந்த சூழலில் அவ்வப்போது அதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனையும் நடத்தி வருகிறார்.
இதைத்தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த ரஜினிகாந்த், தனது அரசியில் கட்சியின் பெயரை குறிப்பிடாமல் பேச தொடங்கினார். தனது கட்சியின் மூன்று முக்கிய திட்டங்களை முன் வைத்தார்.
அதில், தனக்கு முதலமைச்சர் ஆசை இல்லை எனவும், தான் கட்சியை வழிநடத்துவதாகவும் தெரிவித்தார். அந்த வகையில் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை எனவும், 50 வயதுகுட்டபட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறிய அவர், ஆட்சியில் தவறு செய்பவர்களை கட்சி தலைமை தூக்கி எறியும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புரட்சி வரட்டும், தான் அப்போது வருவதாக நழுவிச் சென்றார்.
ரஜினியின் பேச்சு பற்றி தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் மத்தியில் ஆதரவும், ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரஜினிகாந்த் என்ன சொல்கிறாரோ அதற்கு கீழ்படிந்து அவர் வழிகாட்டுதல்படி செயல்பட இருப்பதாக திருநெல்வேலி மாவட்ட ரஜினி ரசிகர்கள் தெரிவித்தனர். அவர் வகுத்த முக்கிய திட்டங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பு என்பதை வரவேற்பதாக கூறினார்.
Tirunelveli Rajini makkal mandram fans welcomes Rajini political stand மேலும், ரஜினியின் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்து, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வாரம் தனது ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து அரசியல் பிரவேசம் குறித்தும், அரசியல் கட்சி தொடர்பான சில முக்கிய முடிவகளையும் ஆலோசித்தார். அதில், தான் தொடங்கவிருக்கும் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என பேசப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவர் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்ககூடும் என பொதுமக்கள், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
ஆனால் இம்முறையும் அது நடக்காமல் போயுள்ளது. ஆனால் தனது கட்சி பெயரை அறிவிக்காவிட்டாலும், கட்சியின் நிலைப்பாடு குறித்து தற்போது விவரித்திருப்பது ரஜினி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: அரசியல் பிரவேசம் குறித்த ரஜினியின் அசத்தல் பேச்சு - வீடியோ