தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

திட்டமிட்ட தேதிக்கு முன்பே வெளியாகிறதா ’எம்ஜிஆர் மகன்’? - முன்கூட்டியே வெளியாகும் சசிக்குமார் நடித்த எம்ஜிஆர் மகன்

சசிகுமார் நடித்துள்ள எம்ஜிஆர் மகன் திரைப்படம், ஏப்ரல் 23ஆம் தேதிக்கு முன்பே வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

சசிகுமார் நடித்துள்ள எம்ஜிஆர் மகன் திரைப்படம் திட்டமிட்டதை விட முன்கூட்டியே வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
சசிகுமார் நடித்துள்ள எம்ஜிஆர் மகன் திரைப்படம் திட்டமிட்டதை விட முன்கூட்டியே வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

By

Published : Mar 8, 2021, 3:44 PM IST

சென்னை: சீமராஜா படத்தை தொடர்ந்து இயக்குநர் பொன்ராம் இயக்கியுள்ள படம் எம்ஜிஆர் மகன். இப்படத்தில் சசிக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். சத்யராஜ், மிருணாளினி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர். அந்தோணிதாசன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்தாண்டு ஏப்ரல் 23ஆம் தேதி எம்ஜிஆர் மகன் படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் நடிப்பில் மார்ச் 26ஆம் தேதி வெளியாக இருந்த டாக்டர் திரைப்படம் மே மாதத்திற்கு தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக எம்ஜிஆர் மகன் படத்தை மார்ச் 26ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க :'என்ஜினுக்கு வேலு நாச்சியாரின் பெயர்' - வடக்கு ரயில்வே புகழாரம்

ABOUT THE AUTHOR

...view details