தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ’தலைவி’. இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத், எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்வு நேற்று (மார்ச்.23) சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதனையடுத்து கங்கனா ரனாவத் படத்தில் பணியாற்றிய தனது பயணம் குறித்து நிகழ்ச்சியில் பேசினார்.