கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் டாக்டர். பிரியங்கா மோகன், யோகிபாபு, வினய் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளன.
படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், குரல் பின்னணி உள்ளிட்ட இதரப் பணிகள் நடைபெற்றுவந்தன. இப்படம் வரும் 26ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாகப் படக்குழுவினர் சில நாள்களுக்கு முன்னர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் படத்தின் வெளியீடு ரம்ஜான் பண்டிகையை ஒட்டிய மே 13ஆம் தேதி தள்ளிவைக்கப்படத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க :வேட்பாளர் தேர்வில் கருத்து வேறுபாடு! ஓபிஎஸ்-இபிஎஸ் மீண்டும் மோதல்!