சென்னை: அடர்ந்த வனப்பகுதிக்குள் யாரும் செல்லாத இடங்களில் 'கா' படத்தை படமாக்கியுள்ள படக்குழுவினர்கள் இரவு ஷுட்டிங்கின் போது காட்டு யானையிடம் சிக்கி பின்னர் தப்பித்துள்ளனர்.
ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் 'கா' . இந்த படத்தில் கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடித்து வருகிறார். படத்தில் கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறை மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைஃப் போடோகிராபராக தோன்றவுள்ளார்.
Andrea as wild life photographer in Kaa movie இந்தப் படம் முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப்படுத்தி படம் தயாராகி வருகிறது. 'கா' என்றால் காடு, கானகம் என்று பொருள்படும். இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குநர் நாஞ்சில்.
Andrea as wild life photographer in Kaa movie இதையடுத்து படம் குறித்து இயக்குநர் நாஞ்சில் கூறியதாவது, முழுக்க முழுக்க காட்டை மையமாக வைத்து படத்தை உருவாக்கி வருகிறோம். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு மூணாறில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக யானை ஒன்று வந்துவிட்டது.
நாங்கள் அனைவரும் பயந்துவிட்டோம் எங்களுடன் இருந்த வனக்காப்பாளர்கள் அந்த யானையை விரட்டி எங்களை காப்பாற்றினார்கள். இப்படி ரிஸ்க் எடுத்து நிறைய காட்சிகளை படமாக்கியிருக்கிறோம்.
Andrea as wild life photographer in Kaa movie மேலும் 30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இதுவரை யாரும் செல்ல முடியாத இடங்களுக்கு வன அலுவலகத்தில் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடித்தியிருக்கிறோம். அந்தக் காட்சிகளை திரையில் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும். காட்டின் அழகை வித்தியாசமான ஒரு கோணத்தில் இதில் கண்டு ரசிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.