தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இதுனாலதன் தல அஜித் வெளியே வரதே இல்ல - அலிஷா அப்துல்லா சொன்ன காரணம் - பைக் ரேஸர்

அஜித் பொதுவெளியிலும் சரி பொது நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்ளதாற்காக காரணத்தை பெண் பைக் ரேஸ் சாம்பியன் அலிஷா அப்துல்லா தனது ட்விட்டர்பக்கத்தில் கூறியுள்ளார்.

Alisha abdullah
Alisha abdullah

By

Published : Apr 10, 2020, 3:43 PM IST

இந்தியாவின் முதல் பெண் தேசிய ரேஸிங் சாம்பியன் என்ற பெருமையை பெற்றவர் அலிஷா அப்துல்லா. இவர் தமிழில் வெளியான 'இருப்புக்குதிரை' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் அலிஷா, தல அஜித் தன்னை வாழ்த்திய வீடியோவை வெளியிட்டார். இதைக் கண்ட அஜித் ரசிகர்கள் அந்த வீடியோவை வைரலாக்கினர்.

இதனையடுத்து அலிஷா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்தின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை பற்றி பதிவிட்டுள்ளார்.

அதில், அஜித் பொதுவெளியில் வராததற்கு காரணம், "மக்கள் அவருக்கான இடத்தை கொடுப்பதில்லை. அவர் பொது வெளியில் வந்தால் அவரை மக்களும் ரசிகர்களும் சுற்றி விடுகின்றனர். இது ஒரு ரேஸ் டிராக் ஆகும். இதிலும் அவரை பார்ப்பதற்கு கூட்டம் கூடி அவரால் சுதந்திரமாக நடக்க முடியாமல் போகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விஜய்யின் தீவிர ரசிகை நான்...அஜித் விடியோவுக்கு பிறகு அலிஷாவின் அடுத்த அப்டேட்

ABOUT THE AUTHOR

...view details