தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'எனக்கு கேர்ள் ஃபிரண்டு இல்ல, நீ மட்டும் எப்படி ஜாலியா இருக்கலாம்' - 'பப்பு'விடம் குறும்பு செய்யும் சிம்பு! - மாநாடு, பத்து தல

காதலர் தினத்தன்று நடிகர் சிம்பு வெளியிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Simbu
Simbu

By

Published : Feb 15, 2021, 10:04 AM IST

உலகம் முழுவதும் காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் சிம்பு நேற்று ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில், சிம்புவின் நெருங்கிய நண்பரான மகத்தின் வளர்ப்பு நாயிடம் பேசி கலகலக்க வைத்துள்ளார்.

அதில் அவர் பேசியதாவது, "நீ பொண்ணு. இப்பதான் நீ வளர்ந்து வந்திருக்க. இப்ப நீ ஒரு பையனை சந்திக்கணும். அந்த பையனோட உடக்கு சில விஷயங்கள் எல்லாம் நடக்கணும். அதுக்கு எனக்கு கல்யாணம் நடக்கணும். நான் மட்டும் தனியா இருக்கேன்.

நீ மட்டும் எப்படி ஜாலிய இருக்கனா இது நியாயம் இல்ல. புரிஞ்சதா பப்பு. எனக்கு அந்த கடவுள் கொடுப்பாரு; வரும்போது வரட்டும். நீ சந்தோஷமாக இரு. ஏதாவது சொல்லேன். ஆயிடும்ணு சொல்றீயா.. ஆயிடுமா.. இவ்வாறு அதில் பேசியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் வெற்றி பெற்றுள்ள நிலையில், மாநாடு, பத்து தல உள்ளிட்ட படங்களில் சிம்பு பிஸியாக நடித்துவருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details