கரோனாவின் பாதிப்பு எப்போது விலகும் என்பது குறித்து சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
உலகப் பெருந்தொற்றான கரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. கரோனாவில் இருந்து இந்த உலகம் எப்போது விடுபடும் என்பது தற்போது எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. கரோனா எப்போது தனது கோரதாண்டவத்தை நிறுத்தும் என்பது மில்லியன் ட்ரில்லியன் டாலர் கேள்வி.
இந்நிலையில் கரோனாவில் இருந்து இந்த உலகம் எப்போது தப்பிக்கும் என்பது குறித்த செய்தியை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், கரோனாவில் இருந்து உலகம் எப்போது விடுபடும் என்பது குறித்து 8 மாதங்களுக்கு முன்பே ஜோதிட சிறுவன் ஒருவன் சரியாக கணித்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
அதில், ஆகஸ்ட் 22, 2019 அன்று அபிக்யா ஆனந்த் என்ற ஜோதிட சிறுவன் தனது யூடியூப் சேனலில் நவம்பர் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை உலகம் ஒரு கடினமான சூழலை சந்திக்கும். இந்த ஆறு மாத காலப்பகுதியில் உலகளாவிய நோய் பரவி ஒரு பதற்றம் அதிகரிக்கும். இதன் உச்சமே மார்ச் 31 ஆம் தேதி தெரியும். எப்படியோ மே 29 ஆம் தேதி இந்த கடின காலம் விலகிச் செல்லும் என்று கணித்துள்ளார்.
கரோனா பற்றி அபிக்யா ஆனந்த் கூறுகையில், கரோனா என்பது ஒரு உலகப்போர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது வைரசுக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போர். அரசாங்கங்கள் சம்பந்தப்பட்டதா என்பது உங்கள் வியூகம்.