அடுத்த முறை திரையரங்குக்கு சென்றால், சைன்ஸ் ஃபிக்சன் திரைப்படத்தில் வரும் காட்சியை நீங்கள் கண்முன் உணர்வீர்கள். திரைப்படத்திற்கான அனுமதி சீட்டுக்கு பதில் க்யூ ஆர் கோடு பயன்படுத்தப்படும். கைபிடி மெட்டல் டிடெக்டர்களுக்கு பதில் விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர்கள் பயன்படுத்தப்படும். தகுந்த இடைவெளி கடைபிடிக்கப்பட்டு இருக்கை வசதிகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கும். கிருமி நாசினி, முகக் கவசங்கள் ஆகியவற்றை பார்வையாளர்கள் சொந்தமாக கொண்டு வர வேண்டும். 3D திரைப்படம் பார்க்க சென்றால் 3D கண்ணாடிகளை சொந்தமாக வாங்கும் சூழல் உருவாகும்.
புதுவிதமான திரையரங்குக்கு அனைவரும் வரவேற்கப்படுவர். விதிகள் மாற்றியமைக்கப்பட்டு ஜூன் 15 முதல் ஜூலை 15 வரையிலான காலகட்டத்தில் அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 135 கோடி ரூபாய் மதிப்பில் உருவான ரோஹித் ஷெட்டியின் சூர்யவன்ஷி, 125 கோடி ரூபாய் மதிப்பில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான கபிர் கான் ஆகிய திரைப்படங்களின் வெளியீட்டை எதிர்பார்த்து பாலிவுட் காத்துக் கொண்டிருக்கிறது. பொறுமையை இழந்த படைப்பாளிகள் திரைப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட தயாராகியுள்ளனர். இந்தியா முழுவதும் 620 திரையரங்குகளை சொந்தமாக கொண்ட ஐனாக்ஸ் நிறுவனம் இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. குலாபோ சிடாபோ என்ற திரைப்படம்தான் ஒடிடி தளத்தில் முதன்முதலாக வெளியானது.
இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் கடினமான காலத்தில் உடனிருக்கவில்லை, இதற்கு சரியான பதிலடி திருப்பிதரப்படும் என ஐனாக்ஸ் நிறுவனம் விமர்சித்துள்ளது. நிதி நெருக்கடி, காப்பீட்டு திட்டம் இல்லாதது, திரையரங்குகள் திறப்பு தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லாத காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இருக்கும் 9,000 திரையரங்களில் பிவிஆர் நிறுவனத்திற்கு சொந்தமாக 850 திரையரங்குகள் உள்ளன. ஐனாக்ஸ் நிறுவனத்தின் கருத்துக்கு பிவிஆர் நிறுவனத்தில் தலைவர் அஜய் பிஜிலி, துணை நிற்கவில்லை. இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "இது தற்காலிகமானதே, அடிப்படை மாற்றமாக பார்க்கக் கூடாது. பெரிய பட்ஜெட் படங்களை ஒடிடியில் வெளியிட எந்த தயாரிப்பாளரும் முன் வரமாட்டார். திரைப்படங்களின் 45 விழுக்காடு வருமானம் திரையரங்குகள் மூலமே வருகிறது" என தெரிவித்துள்ளார்.
வருமானமே இறுதி நோக்கம். இனி, சிறிய பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் வெளியாவது அரிதாகும். கரோனாவுக்கு பிறகான உலகத்தில், பெரிய பட்ஜெட் படங்கள் திரையரங்குகளிலும், இந்திய பாக்ஸ் ஆபிஸில் 10 விழுக்காடு வருமானத்தை பங்களிக்கும் டப் செய்யப்பட்ட ஹாலிவுட் படங்கள், சிறிய பட்ஜெட் படங்கள் ஆகியவை ஒடிடி தளத்திலும் வெளியாகும். இரண்டு விதமான படங்களை எடுக்கும் படைப்பாளிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். அனு மேனனை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளுங்கள்.