ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் 'வலிமை'. இப்படத்தில் ஹூமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முதல் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது. தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கேம் ஆரமிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி
சமீபத்தில் வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் (கணநேரக் கண்ணோட்டம்) வீடியோ வெளியானது. வீடியோவில் அஜித் ஸ்டைலாக மாஸ் லுக்கில் காணப்பட்டார். மேலும் வீடியோவில் அஜித் பேசிய ”கேம் ஆரமிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி” போன்ற வசனங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன. 'நாங்க வேற மாறி' என்ற பர்ஸ்ட் சிங்கிளும் முன்பாக வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
'வலிமை' படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில்' வலிமை' படத்தின் புதிய ஸ்டில்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
அதே போல் நேர்காணல் ஒன்றில் ஹெச் வினோத் கூறுகையில், வலிமை படத்தின் கதையை அஜித் கேட்டவுடன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அர்ஜூன் தாஸ், பிரசன்னா பொருத்தமாக இருப்பார்கள் என அஜித் கூறியதாக வினோத் தெரிவித்தார்.
ஏமாற்றம்
இந்நிலையில் நடிகர் பிரசன்னா 'வலிமை' படத்தில் அஜித்துடன் இணைந்து பணியாற்றமுடியாமல் போனது ஏமாற்றத்தை அளிக்கிறது என தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்வீட்டில், " என் அன்புக்குரிய தல என் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்பதில் பெருமகிழ்ச்சி. 'வலிமை' வாய்ப்பு கை நழுவி போனதில் ஏமாற்றம் தான் என்றாலும் கூட, பெரிய விசயங்கள் என்னை சேரும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக வலிமை படத்தின் வாய்ப்பு நழுவி போனதற்கான காரணம் தொடர்பாக நீண்ட அறிக்கையை நடிகர் பிரசன்னா வெளியிட்டிருந்தார்.
இரண்டாவது வாய்ப்பு உண்டு
அதுகுறித்து பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில், "வலிமை படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று விரும்பி அன்புடன் வாழ்த்திய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை கூறிக்கொள்கிறேன். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது நானும் உங்களைப் போலவே ஆவலுடன் காத்திருந்தேன்.
என் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடும் நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த அற்புதமான வாய்ப்பு இம்முறை நடக்கவில்லை. இதில் அதீத வருத்தங்கள் இருந்த போதிலும், உங்கள் அனைவருடைய அன்பினாலும் நான் மிகவும் உறுதியாக உணர்கிறேன்.
இரண்டாவது வாய்ப்பு என்ற ஒன்று எப்போதும் உண்டு. வெகு விரைவில் எனது கனவான தல க்கு வில்லனாக நடிப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். உஙகள் அனைவரையும் மிகவும் நேசிக்கிறேன். தொடர்ந்து உங்கள் அன்பை எனக்கு அளியுங்கள். எனக்கு அது மட்டும் போதும்" என தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: 'வலிமை' வெற்றிபெற அஜித் ரசிகர்கள் செய்த 'வலிமை'யான செயல்