தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தளபதி 64' படத்தில் வெப் சீரிஸ் பவி டீச்சர்! - நடிகர் விஜய்

'ஆஹா கல்யாணம்' எனும் வெப் சீரிஸில் பவி டீச்சராக அறிமுகமான நடிகை பிரிஜிடா, 'தளபதி 64' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

web series actress brigida in thalapathy 64

By

Published : Oct 29, 2019, 6:24 PM IST

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பிகில்' திரைப்படம் ரூபாய் 100 கோடி வசூலைத் தாண்டி கலவையான விமர்சனங்களோடு ஓடிக்கொண்டிருக்கிறது.

தற்போது நடிகர் விஜய் தனது பெயரிடப்படாத 'தளபதி 64' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அப்போது ரசிகர்களுக்கு விஜய் கையசைத்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பானது டெல்லியில் 20 நாட்களுக்கு நடக்கபபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020 ஏப்ரல் மாதம் படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிப்பதாக இருந்த நிலையில், ஆண்ட்ரியாவும் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில் 'ஆஹா கல்யாணம்' எனும் வெப் சீரிஸில் பவி டீச்சராக வலம் வந்து சமூக வலைத்தளத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த பிரிஜிடா, 'தளபதி 64' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 'விக்ரம் வேதா’ படத்துல நடிச்சாலும் நடிச்சேன்!

ABOUT THE AUTHOR

...view details