தமிழ் இயக்குநர் கே.வி. ஆனந்த் இன்று (ஏப்.30) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில், தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்ட செய்திகுறிப்பில், "ஏஜிஎஸ் குடும்பத்தின் அன்பு மிகுந்த உறுப்பினரை இன்று நாங்கள் இழந்து நிற்கிறோம். கே வி ஆனந்த் ஆச்சரியப்படத்தக்க ஒளிப்பதிவாளரும், மிகச்சிறந்த இயக்குநரும் ஆவார்.
சமூகப் பிரச்னைகள் குறித்த படங்களை எடுத்தவர் கே.வி.ஆனந்த் - ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இரங்கல்! - கே.வி.ஆனந்த் படங்கள்
சென்னை: கே.வி ஆனந்த் முக்கியமான சமூகப் பிரச்னைகள் குறித்து பேசிய திரைப்படங்களை எடுத்தவர் என, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இரங்கல் தெரிவித்துள்ளது.
AGS
முக்கியமான சமூகப் பிரச்னைகள் குறித்து பேசிய திரைப்படங்களை அவர் எடுத்தார். அன்புள்ளம் கொண்ட மகிழ்ச்சி நிரம்பிய மனிதரான அவர், ஒட்டுமொத்த குழுவின் மீதும் அன்பு செலுத்தினார். அவரது இழப்பைத் தாங்கிக் கொள்ளும் வலிமையை அவரது குடும்பத்திற்கு தருமாறு நாங்கள் பிரார்த்திக்கிறோம். அவரது மறைவு எங்களுக்கு பேரிழப்பாகும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.