பிரதமர் நரேந்திர மோடி, ட்விட்டரில் தனது பெயரை சௌகிதார் நரேந்திர மோடி என மாற்றினார். சௌகிதார் என்ற இந்தி வார்த்தைக்கு காவலாளி என்று பொருள்.
இதுகுறித்து ட்விட்டரில் 'உங்கள் காவலாளி உறுதியாகநிற்கிறேன். நாட்டுக்கு சேவை ஆற்றுகிறேன். ஆனால் நான் தனி ஒருவன் இல்லை'என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷை வைத்து ஏ.எல்.விஜய் இயக்கும் 'வாட்ச்மேன்' பட போஸ்டரில் நாய், 'நானும் காவலாளிதான்' என்ற பெயர் பலகையை வாயில் கவ்வியபடி-இருந்தது. இந்த போஸ்டர் வெளியாகி இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஏப்ரல் 12ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டையொட்டிவெளிவர இருக்கும் இப்படத்தில் ஜிவி பிரகாஷ், யோகிபாபு, ராஜ் அர்ஜுன், சக்யுக்தா ஹெக்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.