இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள படம் 'வாட்ச்மேன்'. இத்திரைப்படம் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படம் பள்ளி மாணவர்களுக்கு திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாலர் பள்ளி மாணவர்களுக்கு 'வாட்ச்மேன்' திரைப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் பிடி செல்வகுமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி போலீசாருக்கு 50 சிசிடிவி கேமராக்களை வழங்கிய 'வாட்ச்மேன்' படக்குழுவினர் - வாட்ச்மேன்
பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் 'வாட்ச்மேன்' படக்குழுவினர் பொள்ளாச்சி காவல்துறையினருக்கு 50 சிசிடிவி கேமராக்களை வழங்கியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜி.வி.பிரகாஷ், 'வாட்ச்மேன்' திரைப்படம் குழந்தைகளை கவரும் படமாக எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுத்தேர்வு நடைபெறுவதால், தேர்வு முடிந்த பின்னர் படத்தை பார்க்கவும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அன்பார்ந்த வாழ்த்துகள். தேர்தல் களத்தில் வாக்காளர்கள் தெளிவாக சிந்தித்து வாக்களிக்க வேண்டியது நமது கடமை’ எனத் தெரிவித்தார்.
இதன் பின்னர் பேசிய தயாரிப்பாளர் பிடி செல்வகுமார், ”பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை மீண்டும் நடைபெறாமல் இருக்க 50 சிசிடிவி கேமராக்கள் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதன்படி இன்று 50 சிசிடிவி கேமராக்களை பொள்ளாச்சி காவல்துறையினருக்கு 'வாட்ச்மேன்' படக்குழுவினர் சார்பில் வழங்கியுள்ளோம்” என்றார்.