தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

''நாடு முழுவதும் என் மற்ற படங்களை மறந்து விட்டனர்'' - 'ஊ அந்தாவா மாமா..' வெற்றி குறித்து சமந்தா பேச்சு - samantha on oo antava success

சமீபத்தில் தான் நடித்து நாடு முழுவதும் பெரும் ஹிட் அடித்த 'ஊ அந்தாவா மாமா..' பாடல் குறித்து நடிகை சமந்தா கருத்து தெரிவித்துள்ளார்.

”நாடு முழுவதும் என் மற்றப் படங்களை மறந்து விட்டனர்” - ஊ அந்தாவா மாமா.. வெற்றி குறித்து சமந்தா பேச்சு
”நாடு முழுவதும் என் மற்றப் படங்களை மறந்து விட்டனர்” - ஊ அந்தாவா மாமா.. வெற்றி குறித்து சமந்தா பேச்சு

By

Published : Mar 11, 2022, 9:04 PM IST

சமீபத்தில் நாடு முழுவதும் பெரும் ஹிட் அடித்த புஷ்பா திரைப்படத்தின் 'ஊ அந்தாவா மாமா..' பாடல் குறித்து, அதில் நடித்த சமந்தா பேசியுள்ளார்.

கிரிட்டிக் சாய்ஸ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபின், பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், 'என் மீது மக்கள் வைக்கும் அன்பை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

ஊ அந்தாவா மாமா... பாடல் இவ்வளவு பெரிய வெற்றியடையும் என்று சத்தியமாக நினைத்துப் பார்க்கவில்லை. தெலுங்கு ரசிகர்களையும் தாண்டி, இந்தியா முழுவதும் என் மற்ற படங்களைக் கூட மறந்துவிட்டு, ஊ அந்தா வா மாமா... பாடலை வைத்து என்னை அடையாளம் காண்கிறார்கள்' எனத் தெரிவித்தார்.

”நாடு முழுவதும் என் மற்ற படங்களை மறந்து விட்டனர்” - ’ஊ அந்தாவா மாமா..’ வெற்றி குறித்து சமந்தா பேச்சு

இவரின் 'ஊ அந்தா வா மாமா..' பாடல் தற்போது வரை இணையதளத்தில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது.

இதையும் படிங்க:சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் : மனு கொடுத்து எதிர்ப்பு தெரிவித்த பாமக

ABOUT THE AUTHOR

...view details