தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 23ஆம் தேதி திரையுலக பிரபலங்களில் ரீயூனியன் நடைபெற்றது. தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்சியில் 1980களில் தென்னிந்திய திரையுலகளில் அடியெடுத்து வைத்து பிரபலமான பல்வேறு நடிகர்கள், நடிகைகள் கலந்துகொண்டனர்.
இதில், நடிகர்கள் நாகார்ஜுனா, மோகன்லால், ஜாக்கி ஷெரஃப், பிரபு, பாக்யராஜ், சரத்குமார், ஜெயராம், வெங்கடேஷ் மற்றும் நடிகைகள் குஷ்பு, சுஹாசினி, அமலா, அம்பிகா, ராதா, ஷோபனா, ராதிகா, ஜெயப்பிரதா உள்ளிட்ட பலர் பங்கேற்று தங்களது திரையுலக பயணத்தை நினைவு கூர்ந்தனர்.
பாடல்கள், உணவு, ஆட்டம் பாட்டம் என களைகட்டிய ரீயூனியன் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நடிகைகள் குஷ்பு மற்றும் ஜெயப்பிரதா உடன் இணைந்து டூயட் பாடல்களுக்கு நடனமாடி அசத்தியுள்ளார்.