பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். வேலையில்லா பட்டதாரி படத்தின் முதல் பாகத்தில் துணை நடிகையாக அறிமுகம் ஆனார். அப்படத்தில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிதான் அவருக்கான அடையாளத்தை பெற்றுத்தந்தது. இதனைத்தொடர்ந்து யுவன் சங்கர் தயாரித்த 'பியார் பிரேமா காதல்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பேஸ்கட் பால் ஆடிய ரைசா; வைரலாகும் வீடியோ! - ட்விட்டர் வலைதளம்
'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ரைசா வில்சன் பேஸ்கட் பால் ஆடும் வீடியோவை வெளியிட்டு தன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
பியார் பிரேமா காதல் படத்தைத் தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ஆலிஸ் படத்தில் ரைசா நடித்து வருகிறார். பெண்களை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தினை மணி சந்துரு இயக்குகிறார். கிரைம் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா வில்சன் அவ்வப்போது தனது புகைப்படம் அல்லது வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பேஸ்கட் பால் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. ரைசா முன்பக்கம் நின்றுகொண்டு தன் கையில் வைத்திருக்கும் பேஸ்கட் பாலை தலைகீழாக வீசியெறிந்து பந்து கரெக்டாக வலையில் விழுகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ஓஹோ... ஓஹோ என ரைசாவை புகழ்ந்து வருகின்றனர்.