90-ஸ் கிட்ஸ்களிடம் பிரபலமான ‘டாம் அண்ட் ஜெர்ரி’ ‘பாப்பாய்’ உள்ளிட்ட கார்டூன்களோடு சேர்ந்தது ‘ஸ்கூபி டூ: வேர் ஆர் யூ’. த்ரில்லர் கலந்த காமெடி சீரிஸான ஸ்கூபி டூ தற்போது ‘ஸ்கூப்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. ஸ்கூபி எனும் நாய் மற்றும் அதன் நண்பன் ஷேகியுடன் வெல்மா, டேஃப்னி, ஃப்ரெட் ஆகியோர் இணைந்து மர்மமான வழக்குகளை சந்திப்பதுதான் ஸ்கூபி டூவின் கதை. தற்போது இதனை அனிமேஷனில் முழுத் திரைப்படமாக வார்னர் ப்ராஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
90-ஸ் கிட்ஸ்களின் நினைவுகளை மீட்டெடுக்க வருகிறது ‘Scoob' - ஸ்கூபி டூ
வார்னர் ப்ராஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார்டூன் கதாபாத்திரமான ஸ்கூபி டூவின் கதை படமாக்கப்பட்டு ‘ஸ்கூப்’ (Scoob) என்ற பெயரில் அதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
Scoob trailer
2020 கோடை விடுமுறை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள ‘ஸ்கூப்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி கார்டூன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த முறை ஸ்கூபி குழுவினர் அவிழ்க்கப்போகும் மர்ம முடிச்சு மிகவும் பயங்கரமானது என வார்னர் ப்ராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: புதுயுக்தியை சாதுர்யமாகக் கையாண்டு வெற்றி பெற்ற 'வி1'