நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக மணிரத்னம், ஜெயேந்திரா தயாரிப்பில், ஒன்பது முன்னணி இயக்குநர்கள், ஒன்பது முன்னணி ஒளிப்பதிவாளர்கள், ஒன்பது முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்து நவரசங்களை வைத்து 'நவரசா' என்னும் படத்தை இயக்கியுள்ளனர்.
இந்தப் படத்தை பிரியதர்ஷன், வசந்த் சாய், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், அரவிந்த் சாமி, கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் நரேன், ரதிந்தீரன் ஆர் பிரசாத், சர்ஜூன் ஆகிய ஒன்பது இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.
கோபம், சிரிப்பு, வெறுப்பு உள்ளிட்ட 9 ரசங்களை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள 9 குறும்படங்களில் முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், யோகிபாபு, நடிகைகள் பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் கடந்த இரண்டாம் தேதி வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது நவரசா டீசர் எப்படி எடுக்கப்பட்டது என்பது குறித்த மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள், நவரசா படத்தின் மீதான எதிர்பாரப்பு அதிகரித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:10 years of Kanchana: சூறக்காத்த போல வராடா