சென்னை: தமிழ்நாட்டில் புதிய ஆட்சி உருவாக அனைவரும் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நாட்டுமக்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். நேர்மையாக வாக்களிக்க வேண்டும். பணம் வாங்காமல் ஓட்டுப்போட வேண்டும்.
நோட்டாவுக்கு பரிந்துரைக்கும் எஸ்ஏ சந்திரசேகர்! - vijay politics
தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வேண்டும் என்று பரவலாக சொல்லப்பட்டு வருகிறது. அதற்கு புதியவர்கள் ஆட்சிக்கு வந்தால்தான் முழு மாற்றம் ஏற்படும். காமராஜர், அண்ணா போன்றவர்களைப் போல் புதியவர்கள் வந்தால்தான் நேர்மையான தூய்மையான ஆட்சி மாற்றம் ஏற்படும்.
தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வேண்டும் என்று பரவலாக சொல்லப்பட்டு வருகிறது. அதற்கு புதியவர்கள் ஆட்சிக்கு வந்தால்தான் முழு மாற்றம் ஏற்படும். காமராஜர், அண்ணா போன்றவர்களைப் போல் புதியவர்கள் வந்தால்தான் நேர்மையான தூய்மையான ஆட்சி மாற்றம் ஏற்படும். இதற்காக அனைவரும் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும்.
யாருமே புடிக்கவில்லை என்றால், நோட்டாவுக்கு வாக்களித்தால் சமூக சிந்தனை உள்ளவர்கள் நமக்காக அரசியல் களத்தில் பணியாற்ற வருவார்கள். தலைவன் தொண்டர்களை உருவாக்குவதை விட, தொண்டர்களால் தலைவன் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.