தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அஜித், விஜய்யிடம் எனக்குப் பிடித்த பண்புகள் இவைதான் - விவேக்

அஜித், விஜய்யிடம் தனக்குப் பிடித்த குணம் குறித்து நகைச்சுவை நடிகர் பேசியுள்ளார்.

அஜித், விஜயிடம் எனக்கு பிடித்த பண்புகள் இதுதான்- விவேக்
அஜித், விஜயிடம் எனக்கு பிடித்த பண்புகள் இதுதான்- விவேக்

By

Published : Mar 10, 2020, 3:30 PM IST

நடிகர் விவேக் அடிக்கடி தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதில் அளித்துவருகிறார். அந்தவகையில் அவர் இன்று வெளியிட்டிருந்த ட்வீட்டில், தனக்குப் பிடித்த மூன்று நடிகர்களின் முக்கியப் பண்புகள் என்று அவர்கள் பேசிய வசனங்களையே குறிப்பிட்டுள்ளார்.

அதில், சூப்பர் ஸ்டார் ரஜினியை குறிப்பிடுகையில் - 'யார் பற்றியும் அவதூறு பேசாதே',

தளபதி விஜய் பற்றி கூறுகையில் - எதிர்மறையான கருத்துகளைத் தவிருங்கள் என்று பொருள்படும் 'Ignore Negativity',

தல அஜித் பற்றி - 'வாழு; வாழவிடு' எனப் பதிவிட்டுள்ளார்

இதையடுத்து ரசிகர்கள் சிலர் தனுஷ் பற்றி கூறுங்கள் என்று பதிவுசெய்தனர். இதற்குப் பதிலளித்த விவேக், ''இன்று பலரின் உயர்வுக்கும் இருப்புக்கும் தனுஷ் ஒரு ஏணியாகப் பாலமாக இருக்கிறார். மிகச் சிறந்த நடிகர். நம் பெருமை'' என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஆர்யா-சாயிஷா இணைக்கு 'டெடி' டீசரை பரிசளித்த படக்குழு!

ABOUT THE AUTHOR

...view details