சீனாவின் வூஹான் நகரில் தோன்றியதாகக் கூறப்படும் கோவிட்-19 (கொரோனா) என்ற வைரஸ் தொற்று, தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. கடந்தாண்டு டிசம்பர் இறுதியில் பரவத் தொடங்கிய, இந்தத் தொற்று காரணமாக உலகளவில் இதுவரை மூன்றாயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நிலவேம்பு, ஆரஞ்சு, நெல்லி உண்டால் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் - நடிகர் விவேக் - கொரனோவில் பாதுகாக்க விவேக் கூறும் ஆலோசனை
கொரோனாவில் இருந்து தப்பிக்க நிலவேம்பு, ஆரஞ்சு, நெல்லி ஆகியவற்ற எடுத்துக்கொள்ளுங்கள் என விவேக் கூறியுள்ளார்.
![நிலவேம்பு, ஆரஞ்சு, நெல்லி உண்டால் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் - நடிகர் விவேக் vivek](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6377905-112-6377905-1583990816138.jpg)
vivek
இதிலிருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலியுறுத்தி அரசும் பிரபலங்களும் விழிப்புணர்வுகளை மக்களிடையே கூறிவருகின்றனர்.
இதனையடுத்து நகைச்சுவை நடிகர் விவேக் தனது சமூக வலைதளப்பக்கமான ட்விட்டரில், "அடிக்கடி சோப் அல்லது சுத்திகரிப்பானால் கை கழுவுதல், கூட்டம் உள்ள இடத்தில் முகமூடி அணிதல், நம் கைகள் படும் இடம் சுத்தமாக இருக்கிறதா என உறுதிசெய்தல், இருமல் தும்மல் இருப்பவரோடு இடைவெளிவிட்டு இருத்தல் - நிலவேம்பு, ஆரஞ்சு, நெல்லி உண்ணல்.-#கொரோனா தவிர்ப்போம்" எனப் பதிவிட்டுள்ளார்.