சமூகவலைதளத்தில் ஒரு விஷயம் வைரலாவதற்கு மிக முக்கிய காரணமாக அமைவது மீம்ஸ்கள். எவ்வளவு பெரிய சீரியஸான விஷயத்தையும் மீம்ஸ் கிரியேட்டர்கள் சட்டென நகைச்சுவையாக மாற்றிவிடுவர். அதே போல் மக்களுக்கு தேவையான விஷயங்களையும் விழிப்புணர்வையும் அதே மீம்ஸ்களால் உணரவைப்பார்கள். இதனால் சமூகவலைதளத்தில் மீம்ஸ்களுக்கும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் தனி இடம் உண்டு.
தற்போது இந்தியாவை கரோனா தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இதனிடையே, வெட்டுக்கிளிகள் படையெடுப்பு காரணமாக வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விவசாய பயர்கள் பெரும் சேதம் அடைந்துள்ளது.
அந்த வகையில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பை கட்டுப்படுத்தும் விதமாக மீம்ஸ் கிரியேட்டர்கள் நகைச்சுவையாக 'ரன்' படத்தில் விவேக்கின் காட்சியை வைத்து மீம்ஸ்களை உருவாக்கி பதிவிட்டனர். இந்த மீம்ஸ் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்தது. இந்த மீம்ஸை பார்த்த விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ-ட்வீட் செய்து, 'ஒரு படத்தை வச்சிக்கிட்டு என்னவெல்லாம் சொல்றீங்க!! யாரை எல்லாம் ஓட்டுறீங்க!! “Memes பசங்க ஐடியா உள்ள பசங்க!!' என பாராட்டியிருந்தார்.
இவரின் இந்த கருத்துக்கு நெட்டிசன் ஒருவர் 'மீம் கிரியேட்டர்களின் தலைவர் வடிவேலு' எனக் கூறி வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக விவேக், 'உண்மை. வடிவேலுவை போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை! வாழ்க அவர் நகைச்சுவைப் பணி' என ட்வீட் செய்திருந்தார்.
இதையும் படிங்க: நிலவேம்பு, ஆரஞ்சு, நெல்லி உண்டால் கரோனாவில் இருந்து தப்பிக்கலாம் - நடிகர் விவேக்