தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தலைவர் 168 இல் இணைகிறாரா நடிகர் விவேக்?

சிறுத்தை சிவா இயக்கும் 'தலைவர் 168' படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக வந்த தகவலைத்தொடர்ந்து நடிகர் விவேக்கும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

vivek to act in rajinikanths new film

By

Published : Nov 1, 2019, 11:21 PM IST

இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

தற்போது சிறுத்தை சிவா இயக்கும் தனது அடுத்த படத்திற்காக தயாராகிக்கொண்டிருக்கிறார். இப்படம் 'தலைவர் 168' என்றுக் அழைக்கப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தைக் குறித்து பல வதந்திகள் இணையத்தில் பரவிக்கொண்டிருக்கிற சமயத்தில், நடிகர் சூரி இப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.

நடிகர் ரஜினியுடன் விவேக்

இந்நிலையில் தற்போது நடிகர் விவேக்கும், ரஜினியுடன் படத்தில் இணைகிறார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. விவேக் ரஜினியோடு இறுதியாக இணைந்து நடித்த படம் சிவாஜி ஆகும்.

இதையும் படிங்க: 'பரவை முனியம்மா' பற்றிய வதந்திகளுக்கு அபி சரவணன் முற்றுப்புள்ளி!

ABOUT THE AUTHOR

...view details