தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிரிப்பில் தொடங்கி அழுகையில் முடியும் காட்சியை ஒரே ஷாட்டில் நடித்த கமல் - விவேக் பாராட்டு - vivek praises for kamal acting in thenali

'தெனாலி' திரைப்படத்தில் ஒரே ஷாட்டில் காமெடியும் கண்ணீரும் கலந்து நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர் கமல்ஹாசன் என நடிகர் விவேக் பாராட்டியுள்ளார்.

vivek praises for kamalhassan for his acting in thenali
vivek praises for kamalhassan for his acting in thenali

By

Published : Jun 9, 2020, 4:56 PM IST

கமல்ஹாசன், ஜெயராம், தேவயானி, ஜோதிகா ஆகியோர் நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய திரைப்படம் 'தெனாலி'. இந்தத் திரைப்படம் 2000ஆம் ஆண்டு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. இப்படத்தில் கமல் இலங்கைத் தமிழராகவும், எதற்கெடுத்தாலும் பயந்துகொள்ளும் சுபாவம் உள்ளவராகவும் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அவரின் நடிப்பு குறித்து தற்போது காமெடி நடிகர் விவேக் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், ”நடிகர் திலகத்திற்குப் பிறகு நம்மை நடிப்பால் கொள்ளை கொண்டவர் நடிகர் கமல்ஹாசன். பலமுறை பார்த்த 'தெனாலி' படத்தை மீண்டும் பார்த்தேன்.

அதில் தன் தாய்க்கு நடந்த சோகத்தைச் சொல்வதை ஒரே ஷாட்டில் நடித்திருப்பார். காமெடியில் ஆரம்பித்து கண்ணீரில் முடிப்பார். அழாத கண்களும் அழும் அற்புத நடிப்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...'இதை நாம் செஞ்சா தான் கரோனாவிடம் இருந்து தப்ப முடியும்' - நடிகர் விவேக்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details