தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மாற்றுத்திறனாளிகளுக்காக அஜித்தின் 'விஸ்வாசம்' சிறப்புக் காட்சி! - பார்வையற்றோர்

அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படம் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புக் காட்சியாக திரையிட உள்ளனர்.

viswasham

By

Published : Sep 11, 2019, 10:30 AM IST

'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் அஜித்-சிவா கூட்டணியில் வெளியான நான்காவது திரைப்படம் 'விஸ்வாசம்'. அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் கோவை சரளா, யோகி பாபு, விவேக், ரோபோ சங்கர், தம்பி ராமையா, அனிகா, சுஜாதா சிவகுமார், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பொங்லுக்கு வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. ஒவ்வொரு வருடமும் மாற்றுத்திறனாளிக்களுக்கான விழா கொண்டப்படுகிறது. அந்த வகையில் இவ்விழா செப்டம்பர் 9 முதல் 11 வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளிகளுக்காக சத்யம் திரையரங்கில் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தின் சிறப்புக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக திரையில் தோன்றும் வசனங்கள் ஸ்பீக்கரில் ஒலிக்கும். ஆனால் பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளிகள் காட்சிகளை புரிந்து கொள்வதற்காக படத்தின் காட்சிகள் ரிகார்ட் செய்யப்பட்ட வர்ணனைகளாக பதிந்து அவர்களுக்கு ஹெட்போனில் கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவர்களுக்கு வசனத்தை கேட்கும் போதே, ஹெட்செட்டில் ஒலிக்கும் வர்ணனைகளால் காட்சிகளை புரிந்து கொள்வார்கள். இந்த காட்சி இன்று மாலை சத்யம் திரையரங்கில் திரையிடப்பட உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details