தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ரத்த கறையுடன் சுத்தியல்'- விஷ்ணு விஷாலின் த்ரில்லர் பட டீஸர் வெளியீடு! - மோகன் தாஸ் டீஸர்

சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் புதியப் படத்தின் டீஸர் வெளியாகி, தற்போது அவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

By

Published : Apr 11, 2020, 6:42 PM IST

நடிகர் விஷ்ணு விஷால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது அடுத்த படத்தின் டைட்டில் வீடியோவை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கு ரசிகர்களின் அனுமதி தேவை என்று கேட்டிருந்தார். அவரது இந்தப் பதிவுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்ததால், தனது அடுத்தப் படத்தின் டைட்டிலுடன் கூடிய டீஸரை விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார்.

அதில், ’விஷ்ணு விஷால் ஒரு சுத்தியலால் வெறித்தனமாக ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டு, உடல் முழுவதும் அந்த ரத்தக் கரையைப் உடலில் பூசிக் கொள்கிறார். இதிலிருந்து இத்திரைப்படம் த்ரில்லர் ஜானரில் உருவாகிறது என்பது தெரிகிறது. 'மோகன் தாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அவரே நடித்து தயாரிக்கிறார்.

இதனை 'களவு' படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்குகிறார். ரத்தம் தெறிக்கும் இந்த டீஸருக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். இதுதவிர மஞ்சிமா மோகனுடன் இணைந்து, 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அன்பானவருடன் காலை உணவு அருந்திய சல்மான் கான்

ABOUT THE AUTHOR

...view details