தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 28, 2021, 6:26 PM IST

ETV Bharat / sitara

விஷ்ணு விஷாலின் ‘காடன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘காடன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

vishnu-vishals-kadan-release-date-announced
vishnu-vishals-kadan-release-date-announced

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது ‘காடன்’, ‘ஜெகஜாலக்கில்லாடி’ ’எஃப்ஐஆர்’, ’மோகன்தாஸ்’ ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பதும், இவை அனைத்தும் கிட்டத்தட்ட ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்த ‘காடன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 26 என சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் இந்த படம் விஷ்ணு விஷால் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 26 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 3ஆம் தேதி இதன் ட்ரெய்லர் வெளியாகும் என விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகிய இதில் விஷ்ணு விஷால், ஜோயா ஹூசைன், ராணா, ஷ்ரியா பில்காவர் உள்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இப்படம் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பை பக்தர்களுக்கே கொடுத்துவிடுங்கள் - சந்தானம் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details