நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் ’மோகன் தாஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, தற்போது வைரலாகவருகிறது.
நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ள புதியப் படத்தின் டீஸர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. ’மோகன் தாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை 'களவு' படத்தை இயக்கிய இயக்குநர் முரளி கார்த்திக் இயக்குகிறார். இதையடுத்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ’மோகன் தாஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், விஷ்ணு விஷால் ரத்தக் கறையுடன் மிகவும் கோபமாக நின்றிருக்கிறார். பின்பக்கத்தில், கால்பந்து வீரர் ரொனால்டோவின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இதுதவிர போஸ்டரில் உள்ள புகைப்படம் சாதாரணமாகக் கிளிக் செய்யப்பட்டது என்றும், ஜுவாலாதான் அவரது தொலைபேசியில் ஊரடங்கு சமயத்தில் எடுத்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'ரத்த கறையுடன் சுத்தியல்'- விஷ்ணு விஷாலின் த்ரில்லர் பட டீஸர் வெளியீடு!